திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பகுதியில் கோவிந்தன் என்பவரது மகன் வினித் என்று ராமு (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினித் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 காவலர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த வினித் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தப்பி ஓடிய வினித்தை தேடி வருகின்றனர்.