
தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை, கமலஹாசன் ஐயா அவர்கள் கோயம்புத்தூர்க்கு வந்திருந்தார்கள். அவர் மீட்டிங் போட வரலைங்க. ஒரு தனியார் கல்லூரிக்கு எதோ பேச வந்தாங்க. வந்துட்டு ஒரு அரசியல் மீட்டிங் போடாம இருந்தா மக்கள் தப்பா நினைப்பாங்கன்னு ஒரு ஹோட்டல்ல அரசியல் மீட்டிங் போட்டாங்க. உடனே மீட்டிங்ல என்ன சொன்னாரு?
கமலஹாசன் ஐயா சொல்றாங்க… விக்ரம் படத்துக்கு கூட்டம் வருது, எனக்கு கூட்டம் வராது என்கிறார். ஐயா விக்ரம் படத்துக்கு ஏன் கூட்டம் வருதுன்னா..? நீங்க நல்லா நடிக்கிறத பாக்குறதுக்காக கூட்டம் வருது. அரசியல்வாதிக்கு எதுக்கு கூட்டம் வரலைன்னா…. திமுகவை தலைகீழாக எதிர்த்த நீங்கள், இன்னைக்கு ரெட் ஜெயன்ட் மூவி படத்துல தான் நடிப்பிங்க.
உங்களைப் போன்ற மிகப்பெரிய நடிகர்… உங்களின் கால் தூசிக்கு உதயநிதி ஸ்டாலின் சமமாங்க ஐயா. கமலஹாசன் ஐயா அவர்களே… உங்கள் கால் தூசிக்கு சமமா உதயநிதி ஸ்டாலின்? கொள்ளையடித்து பணம் சம்பாதிச்சி இருக்காங்க. ஒரு படத்தை இயக்குவதற்கு 100 கோடி ரூபாய் குடுப்பாங்க என்பதற்காக…. உங்களுடைய தன்மானத்தை முழுவதுமாக உதயநிதி ஸ்டாலின்…. ரெட் ஜெயன்ட் மூவி கிட்ட அடகு வைத்துவிட்டு, இன்னைக்கு தைரியமாக மறுபடியும் கோயம்புத்தூருக்கு வந்து போட்டியிடுவேன் என்று சொல்லுகின்றீர்களே என தெரிவித்தார்.