
லாக்கப் படத்தை டைரக்டு செய்த எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள திரைப்படம் “சொப்பன சுந்தரி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதோடு லட்சுமி பிரியா, தீபா சங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உட்பட பலர் நடித்து உள்ளனர். இப்படத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து இருக்கிறது.
டார்க் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்துக்கு பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்து உள்ளனர். சொப்பன சுந்தரி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பணக்காரி எனும் பாடலை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Here's the quirky trailer of #SoppanaSundari 🤣
Dir by @SGCharles2
BG Score by @Composer_Vishal
Music by @Ajmal__Tahseen@LakshmiPriyaaC @mimegopi @dancersatz @Hamsinient @HueboxStudios @ahimsafilms @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/cxwqPAhwzl— aishwarya rajesh (@aishu_dil) March 2, 2023