
13 அணிகள் பங்கேற்கும் 11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை பல்வேறு லிக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணி 12வது இடத்திலும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் அசாம் மாநிலம் குவகாத்தி பகுதியில் இன்று மாலை 7:30 மணிக்கு நடைபெற இருக்கும் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோத இருக்கிறது.