
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஆசிரியரும், போராளியும் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் படை மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் ஆசிரியரான ஜாவத் பாவாக்னா, பாலஸ்தீனத்தின் போராளியான ஆதம் ஜபாரின் இருவரையும் இஸ்ரேல் படை நேற்று சுட்டுக்கொன்றது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்ததாவது, ஜெனின் அகதிகள் முகாமில் பணி மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டனர். எனவே, தங்கள் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது.