
இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் தற்போது லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் கடந்த திங்கள் கிழமை முதல் இதுவரை 700 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள தெற்கு பகுதி நகரங்களின் மீது குண்டு மழை பொழிந்தது. கடந்த அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16,500 குழந்தைகள் உட்பட, 41,467 பாலஸ்தீனிய மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து லெபனான் மீது நடத்தி வரும் தாக்குதலில் 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் படைப்பிரிவு தலைவர் ஹூசைன் சிரோர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் கிட்டத்தட்ட 1000 கிலோ எடை கொண்ட பதுங்குழி குழி குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ட்ரோன் படை பிரிவு தலைவர் உயிரிழந்துள்ளார். மேலும் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் தாக்குதலில் தரைமட்டமான நிலையில் இந்த தாக்குதலின் மூலம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது