
ஹமாஸ் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு உள்ளது என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன் குற்றச்சாட்டி உள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எப்படி செயல்படுகிறதோ, அதே வகையில் தான் ஹமாஸ் தீவிரவாத அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. எந்த விதமான மனிதாபிமானமும் இன்றி பெண்கள், குழந்தைகள் ஆகியோரை வெட்டி சாய்த்திருப்பதிலிருந்தே இதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தொடர்பு உள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது என இஸ்ரேல் நாட்டுக்கான இந்திய தூதர் நார் கிலோன் குறிப்பிட்டிருக்கிறார்.
எப்படி இஸ்ரேல் நாட்டிலே ஹமாஸ் தீவிரவாதிகள் ஊடுருவல் செய்த போது, மொத்த குடும்பங்களையும் பல இடங்களிலே ஒரே இடத்தில் வைத்து சுட்டுக் கொன்று இருக்கின்றார்கள். இது தவிர வீடுகளை பல இடங்களில் எரித்திருக்கிறார்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்திச் சென்று இருக்கிறார்கள், கற்பழித்து இருக்கிறார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்திருப்பதாக இதுவரை தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஹமாஸ் அமைப்பு நடத்தி இருக்கும் இந்த தாக்குதலிலே நிச்சயமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தொடர்பு இருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புதான் இது போன்ற படுகொலைகளில் ஈடுபடுகின்றது.
#WATCH | Israel's ambassador to India, Naor Gilon, says "There is no context into killing people…If you justify terror, then you are a supporter of terror….Israel, India and all peace-loving nations' approach is that terror is never justified…" pic.twitter.com/3WdSuzJOSQ
— ANI (@ANI) October 12, 2023
சிறு குழந்தைகளை கூட கொல்வது, பெண்களை கொல்வது, பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற பல்வேறு விஷயங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு செய்வது போல இருக்கின்றது. ஆகவே ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தாக்குதலில் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருக்கிறது. இதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் தெரிவித்திருக்கிறார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு முழுவதும் முடக்கப்பட்டதாக எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற தகவல்கள் வந்திருக்கிறது. சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு முழுவதுமாக முறியடிக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில்தான் ஹமாஸ் தீவிரவாத தாக்குதலிலே ஐஎஸ்ஐஎஸ்-இன் பங்கு இருக்கிறது என இஸ்ரேல் தூதர் குற்றம் சட்டி இருக்கின்றார்.