காசா பகுதிகளில் தரை, கப்பல், விமானம் என முப்படைகள் மூலம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்த தொடங்கிவிட்டது இஸ்ரேல். அமெரிக்காவும் தங்களுடைய போர்க்கப்பலை அனுப்பி உள்ள நிலையில்,  உடனடியாக காசா பகுதியை விட்டு பாலஸ்தீன மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கேட்டுக் கொண்டுள்ளது. வடக்கு காசா பகுதியை விட்டு மக்கள் குறிப்பிட்ட வழிதடத்தில் வெளியேறுவதற்காக மூன்று மணி நேரம் அந்தப் பாதைகளில் தாக்குதலை நிறுத்துவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 11 லட்சம் மக்களை 24 மணி நேரத்திற்குள் வெளியேற்ற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்த நிலையில்,  இதுவரை ஒரு லட்சம் மக்கள் கூட அந்த பகுதியில் இருந்து வெளியேறவில்லை என கூறப்படுகிறது. மொத்தமாக 22 லட்சம் மக்கள் தொகை கொண்ட காசா பகுதிகளில்,  ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வெளியேறியதாகவும்  கூறப்பட்டுள்ளது.

நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் தற்போது அணிவகுத்து காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போர் நிறுத்தம் மூன்று மணி நேரம். அகதியாக  மக்கள் வெளியேறுவதற்காக போர் நிறுத்தத்தம் தொடர்பான ஒரு அறிவிப்பை இஸ்ரேலினுடைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக காசா காசா நகர குடியிருப்புவாசிகளே உங்கள் பாதுகாப்பிற்காக வடக்கு காசா பகுதியை விட்டு,  தெற்கில் உள்ள பகுதியை நோக்கி உடனடியாக நீங்கள் செல்ல வேண்டும். கடந்த சில நாட்களாகவே உங்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். மூன்று மணி நேரம் மட்டும் குறிப்பிட்ட வழிதடங்களில் தாக்குதலை நடத்துவதை நிறுத்துவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

உங்கள் பாதுகாப்பிற்காக வடக்கு காசா பகுதி மற்றும் காசா நகரின் தெற்கிலே உள்ள கான் யூனிஸ் நகர் வரை செல்லுங்கள் என கூறப்பட்டுள்ளது. உங்களுடைய அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு உங்களுக்கு அவசியம் என்றால் ? தெற்கு நோக்கி செல்லுங்கள். ஹமாஸ் தலைவர்கள் அவர்களுடைய அமைப்பையும், அவர்களது குடும்பத் தலைவர்களையும் பாதுகாத்துக் கொண்டுள்ளார்கள். எனவே கவனமாக நீங்கள் வெளியேறுங்கள் என இஸ்ரேல் ராணுவம் தற்போது எச்சரிக்கை விடுத்திருக்கிறது நிலையில் காசா பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.