
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள நகரில் சுதாகர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி இருந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்பதற்காக மெதுவாக சென்றது.
இதனால் சுதாகர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சி செய்தார். இதில் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்த அவர் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.