
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். நடிகர் அஜித்தின் சினிமா கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் காதல் மன்னன். கடந்த 1988-ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சரண் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் பரத்வாஜ் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானார். காதல் மன்னன் திரைப்படத்திற்கு பிறகு அஜித், சரண், பரத்வாஜ் கூட்டணியில் அமர்க்களம், அட்டகாசம் மற்றும் அசல் போன்ற திரைப்படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அஜித், சரண், பரத்வாஜ் கூட்டணியில் வெளிவந்த 4 படங்களுமே வெற்றி படங்கள் என்பதால் இவர்களது கூட்டணி வெற்றிக் கூட்டணியாக கருதப்பட்டது. இந்நிலையில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி தற்போது 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் பரத்வாஜ் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இவர் தமிழில் என்னுடைய முதல் படம். அஜித் குமாருடன் என்னுடைய முதல் படம். அஜித், சரண், பரத்வாஜ் கூட்டணி. உன்னை பார்த்த பின்பு நான். கொண்டாடிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். மேலும் இவரின் பதிவுக்கு தற்போது ரசிகர்கள் லைக்ஸ் களை குவித்து வருகிறார்கள் .
Can’t believe it’s been 25 years already! My first movie in Tamil, my first for #AK & the first of the A (Ajith) – B (Bharadwaj) – C (Charan) trio 💕 Thanks to all #Thala fans for celebrating #KadhalMannan25 🙏 Unnai paartha pinbu naan… 🎧🎧🎧 pic.twitter.com/TCYuJX9QNm
— Bharadwaj (@BharadwajRamani) March 7, 2023