தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு வாய்மொழி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளிகளில் இனி வெளி ஆட்கள் அனுமதி என்று நுழையக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பள்ளி வளாகங்களில் உள்ள அங்காடிகளை அகற்றுவதற்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாம்.. தற்போது வெறும் வாய்மொழி உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் சுற்றரிக்கையாக அனுப்பப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை அடுத்தடுத்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக வெளி ஆட்களை அழைத்து வந்து பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மட்டும்தான் அறிவுரைகள் வழங்கலாம் எனவும் முன்னதாக அறிவிப்பு வந்தது. மேலும் இதைத் தொடர்ந்து தற்போது வெளி ஆட்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.