
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, முதன்முதலாக பெண்களை காவலர்கள் ஆக்கி அவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி தான். பெண் காவலர்களின் வீர செயல்களை பார்த்து நான் வியந்து போனேன் என்று கூறினார். மேலும் தமிழக காவல்துறையில் திரும்பிய திசை எல்லாம் பெண் காவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி சிங்கப்பெண்களாக தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.
மகளிர் காவல் துறையின் பொன்விழா முழுக்க முழுக்க பெண் காவலர்களால் நடத்தப்படுகிறது. விழாவிற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை குதிரை படை வீராங்கனைகள் வரவேற்று அரங்கத்திற்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு மகளிர் காவல் துறையின் சைக்கிள் பேரணியை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவள் திட்டத்தின் இலட்சிணையையும் தபால் தலையாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் பெண் காவலர்களுக்கான 9 தீர்மானங்களையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார்.