
செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் M.P, இந்தியாவிலேயே சோனியா காந்தி அம்மையார் ஒரு புரட்சி பெண்மணி. தன்னுடைய மாமியார் ரத்த வெள்ளத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு மிதந்த போதும்… தன்னுடைய கணவர் ரத்த வெள்ளத்தில் பல சுக்கு நூறாக உடல் சிதைந்து கொல்லப்பட்ட போதும்…. தன்னுடைய கொழுந்தனார் விபத்தில் இறந்தபோது…. இந்த மாதிரி ஒரு பெண்மணி வீட்டுல யாருக்காவது இப்படி நடந்திருந்தால் ? சாதாரண பெண்மணியாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க.
ஆனால் காங்கிரஸ் கட்சி நலன் காப்பதற்காக.. ஏறக்குறைய 20 ஆண்டுகாலம் தலைமை பொறுப்பேச்சு, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பாடுபட்ட ஒரு வீராங்கனை அன்னை சோனியா காந்தி அம்மையார். இளம் தலைவராக இருக்கக்கூடிய பிரியங்கா காந்தி பொதுச்செயலாளர் என்கிற முறையில் அவுங்க எல்லாரையும் அழைச்சி இருக்காங்க. அதே மாதிரி இந்தியா கூட்டணி இருக்கக்கூடிய ஒவ்வொரு கட்சியினுடைய தலைவர்கள், அல்லது தலைவர்களுடைய பிரதிநிதிகள்… மகளிர் பிரதிநிதியாக திமுக நடத்திய மகளிரை மாநாட்டிற்கு வந்தாங்க.
இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளும் வந்தாங்க. சிபிஐ, சிபிஎம்- இல் இருந்து கலந்துக்கிட்டாங்க. திமுக மகளிர் உரிமை மாநாடு விளம்பரத்துக்காக நடந்தது என சொன்னால்… எல்லா கட்சியும், எல்லா கூட்டமும் வருஷ வருஷம் நடக்குது. எல்லா கட்சியும் பத்திரிகையில் விளம்பரம், ஊடகங்களில் விளம்பரம் கொடுக்கின்றாங்க. இந்த மாதிரி விளம்பரம் இல்லாம எந்த கட்சி மாநாடு, கூட்டம் போட்டு இருக்காங்க. எல்லா கட்சியும் வெளியே தெரியணும்.
மக்களுக்கு தெரியணும்னு விளம்பரம் செய்யுறாங்க. இது என்ன புதுசா ? விளம்பரத்துக்காக தான் பண்ணுறாங்க என சொல்லுறது எல்லாம் சரியான பதில் இல்லை. இதில் என்ன நாடகம் இருக்கு ? அவர் நடந்து போவது என்ன ? அதுக்கு என்ன பெயர் சொல்வது ? ஓரங்க நாடகமா ? ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு கட்சி சார்பாக நடக்கிறது. அது அதை விமர்சிப்பது அவருடைய உரிமை என தெரிவித்தார்.