ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட கழக செயலாளர்கள் எல்லாம்  ஒரு மண்டலம் மாநாடு இப்படி நடத்திருக்கோம். 6 மண்டல மாநாடையும் நாங்க நடத்துனோம்னா…  எப்படினு பாத்துக்கோங்க. ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அடிக்கடி பேசுவாங்க… இந்த நிர்வாகிகள் போட சொல்லிட்டே இருக்கேன்.

மாவட்ட செயலாளர்கள்… நீங்க அதை சீக்கிரம் போட்டு குடுத்தா நல்லா இருக்கும் அப்படின்னு அன்னான் சொன்னாரு. நான் அண்ணன்  கிட்ட சொன்னேன் .. அண்ணே நீங்க சொல்லுறீங்க…  நிர்வாகிகள் எல்லாம் சீக்கிரம் போடுங்கனு…  நிர்வாகிகள் சூப்பரா  போட்டதால் தான்,  மாவட்ட செயலாளர்கள் இதுல சிறப்பா பணியாற்றியதால் தான் தமிழகமே வியக்கின்ற அளவில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… கொட நாட்டுல…

நம்ம இயக்கம் ஆரம்பிச்சி 10 மாசம் தான் ஆகுது… சின்ன குழந்தை….  தவழுக்கின்ற குழந்தையா இருக்கும் இந்த இயக்கம் யாரை எதிர்த்து போராடி ஆரம்பிச்சி இருக்கோம். எடப்பாடியை வம்பு இழுத்து,  இந்த ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம்.   அந்த ஆளுக்கு வர வர புத்தி கெட்டு போச்சி. கொட நாட்டுல கொள்ளை அடிச்சது. அத வச்சிக்கிட்டு விளையாட்டுகிட்டு இருகாங்க. இந்த மாநாட சிறப்பா நடத்திட்டோம்னு நினைக்கிறாங்க.  மக்கள் மன்றம் தீர்ப்பு சொல்லிருச்சு என தெரிவித்தார்.