கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக பாப்பி என்பவர் கடுமையான ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டார். இவருக்கு தொடர்ந்து 2 வாரங்களாக கடுமையான இரத்தப்போக்கு இருந்ததால் முதலில் ஒரு மருத்துவரிடம் சென்றார். அப்போது அவருக்கு இரத்தப்போக்கை நிறுத்தும் மருந்துகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த பிரச்சனை தொடர்ந்ததால் “ஸ்பாய்லர் அலர்ட்…அது வேலை செய்யவில்லையே” என்று பாப்பி நகைச்சுவையுடன் இணையத்தில் பதிவிட்டார்.

அடுத்தடுத்து மாதங்களில் பல்வேறு மருத்துவர்களை அணுகி பல சோதனைகள் செய்தும், பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டும் ரத்தப்போக்கு தொடர்ந்தது. இதனால் டிரான்ஸ்வாஜைனல் அல்ட்ராசவுண்ட் மூலம் அவருடைய ஓவரிகளில் நீர்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்ட போது அதற்கான மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் இரத்தப் போக்கு நிற்கவில்லை. “எனக்கு இரும்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது. தசைகள், எலும்புகள் அனைத்தும் வலிக்கின்றன. எப்போதும் தலைவலி வாந்தி ஏற்படுகிறது என்று பாப்பி கூறினார்.

இந்த இரத்தப்போக்கு ஒரு வருடமாக தொடர்ந்த நிலையில் மருத்துவர்கள் ஹிஸ்டிரோஸ்கோபி மூலம் அவரது கருப்பை உள் ஆய்வை செய்தனர். ஆனால் அதிலும் எந்த தெளிவான காரணமும் தெரிய வரவில்லை. இதனால் அவரது உடல்நிலை மட்டுமல்லாமல் மன நிலையும் பாதிக்கப்பட்டதால் அவர் உலகில் வாழ விரும்பாத நிலைக்கு சென்றதாக கூறினார். இதைத்தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டு 950 ஆவது நாளில் தனது டிக் டாக் பக்கத்தில் உள்ள ரசிகர்களின் உதவியுடன் அவருக்கு ஹார்ட் ஷேப் யூட்ரஸ் எனும் பிறவி குறைபாடு இருப்பது தெரிய வந்தது.

இது மிகவும் அபூர்வமான நோயாகும் என்றும் இதனால் மாதவிடாய் பிரச்சனை, நீண்ட கால இரத்தப்போக்கு மற்றும் கருப்பை சிக்கல்களை ஏற்படும் என்றும் தெரியவந்தது. மேலும் பல சிகிச்சைகளை முயன்றும், தீர்வு கிடைக்காத நிலையில் பாப்பி “நான் என்னுடைய பகுதி கடையை சானிட்டரி பேட்ஸ் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது” என கிண்டலாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.