
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே உள்ள பகுதியில் ஆதி ஈஸ்வரன் (12) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஷமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுவனை, அவரது பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு விஷ முறிவு மருந்து கொடுத்து, செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளித்தனர்.
அதன் பின் சிறிது நாட்களுக்கு முன், அவரது மூச்சுக் குழாயில் துளையிட்டு சுவாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் ஒரு மாதமாக அவர் மீது தனி அக்கறை செலுத்தி, தொடர் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். இதனால் தற்போது சிறுவன் குணமடைந்துள்ளார். மேலும் சிறுவனைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அவரது பெற்றோர் நன்றி கூறினர்.