உத்திரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷஹர் மாவட்டம் அனுப்ஷஹரில் நடந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் அஜய் மற்றும் விஜய் என்ற இருவர், முகேஷ் என்ற நபரை 3 மாடி கட்டடத்தின் மேற்பகுதியில் இருந்து தொங்கவிட்டு மர்மமான முறையில் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியுள்ளது.

இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக அனுப்ஷஹர் கோட்வாலி காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்ட அஜய் மற்றும் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், அவர்களை கைது செய்து தாக்குதல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மேலும் தாக்கப்பட்ட முகேஷின் நிலைமை குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.