
ஜப்பானில் பயணிகள் விமானம் மோதியதில் கடலோர காவல் படை விமான ஊழியர்கள் 5 பேர் பலியாகினர்.
ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தபடியே சென்றது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் மற்றொரு விமானத்துடன் மோதியதில் தீ பிடித்தது. ஏர்பஸ் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டது. ஹொக்கேடோ நகரில் இருந்து டோக்கியோவில் தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது..

விமானத்தில் இருந்த பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 370 பயணிகள் இருந்த விமானம் கடலோர காவல் படை விமானத்தின் மீது மோதியதால் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. பயணிகள் விமானத்தில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருமே வெளியேற்றப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஹனேடா விமான நிலையத்தில் இருக்கும் அனைத்து ஓடுதளங்களும் மூடப்பட்டுள்ளது.
379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும்மீட்கப்பட்ட நிலையில், விமானத்தின் எஞ்சின் பகுதியில் தீப்பற்றியதால் விமானம் முழுவதும் எரிந்து நாசமானது. அதே சமயம் கடற்படை விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் தப்பிய நிலையில், 5 பேரின் கதி என்னவென தெரிய தகவல் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விமானம் தீப்பற்றி எரிந்த விபத்தில் பணியாளர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலோர காவல் படை விமானத்தில் இருந்த கேப்டன் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பணியாளர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்களுடன் பறக்க இருந்த விமானத்திலிருந்து பணியாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் விமானம் ஓடு பாதையில் தரையிறங்கிய போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கடற்படை விமானம் மீது மோதியது எப்படி? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
JAL plane on fire at Tokyo Airport
pic.twitter.com/EL9s7kVJbi— アトリン ✊🏾 (@phoojux) January 2, 2024
動画!羽田空港で日本航空の機体が炎上中!消火作業継続中!海上保安庁の飛行機が衝突!
VIDEO! Japan Airlines aircraft on fire at Haneda Airport! Firefighting operations are continuing! Japan Coast Guard plane collided with a plane!
视频! 羽田机场日本航空公司飞机起火! 灭火行动正在 pic.twitter.com/56bl93Yosd
— worldwalker (@worldwalker_now) January 2, 2024
NEW: Coast Guard aircraft which collided with Japan Airlines plane at Tokyo Airport was a relatively large Dash 8 plane. No word yet on the status of the crew#Japan #Japon #tokyo #crash #landing #fire
— Ratnesh Mishra 🇮🇳 (@Ratnesh_speaks) January 2, 2024
🚨 URGENT UPDATE: New footage surfaces from inside the Japan Airlines plane, revealing the alarming presence of fire 🎥🔥 #羽田 #Japan #Japon #全員脱出 #羽田空港 #Crash #viralvideopic.twitter.com/sO68vrwGN5
— Optimistic (@Lataqnatuu) January 2, 2024