இந்தியாவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேசிய தேர்வு முகாமையானது (NTA) JEE எனும் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். இத்தேர்வானது JEE மெயின்ஸ் மற்றும் JEE அட்வான்ஸ் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான JEE Main-2023 ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை(NTA) வெளியிட்டுள்ளது. ஜனவரி 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.