
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ்வும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர் என கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. எனினும் அதுபற்றி அவர்கள் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. அதே நேரம் அவர்கள் ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்பதால் காதல் கிசுகிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் அவர்கள் இரண்டு பேரும் டின்னர் டேட் சென்றிருக்கின்றனர். ஹோட்டலிலிருந்து அவர்கள் வெளியில் வந்து ஒரே காரில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் அதிதி வந்து காரில் ஏற, பின் பெரிய மாஸ்க் அணிந்து கொண்டு சித்தார்த் அந்த காரில் வந்து ஏறுகிறார்.
View this post on Instagram