குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் இறப்பு ஆகியவை குறித்த பட்டியல் பராமரிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய மருந்துகள்,குளிரூட்டும் கருவிகள் மற்றும் ஐஸ் பாக்கெட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.