கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் கேரள மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் தங்களுடைய கல்லூரி மாணவர்களை கேரளாவுக்கு சுற்றுலா அழைத்து செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளார். மேலும் தற்போது நிபா வைரஸ் பரவி வருவதால் கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.