
இந்திய நாட்டின் பிரதமராக 3-வது நரேந்திர மோடி பதவியேற்று கொண்ட நிலையில் அவர் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்றுள்ளார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து இந்தியா திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 20ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். மேலும் தேர்தல் முடிவடைந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி சென்னைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.