
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் பாண்டியா புரத்தில் ஒரு மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் திடீரென அமோனியா கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 29 பெண்கள், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 30 பேருக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.