சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கவுரிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்க இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் அடங்கிய 2 பேர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்றே உத்தரவு வந்து விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.