
தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் ஜனவரி மாதத்தின் கடைசிக்குள் முடிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு பிப்ரவரியில் 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் பணிகள் அனைத்தும் முடிவடைந்து முதலமைச்சர் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று கூறினார்.