
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது கூடுதலாக சிறப்பு ரயில் சேவைகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. மேலும் இதேபோன்று சென்னை கடற்கரை-பல்லாவரம் மற்றும் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் இரு மார்க்கங்களிலும் சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.