உத்தரபிரசேதம் ராம்பூர் நகரசபை தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நகர சபை தலைவர் பதவியானது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சியடைந்தார். காரணம் 45 வயதாகியும் மமுன் ஷாகான் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

தற்போது நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்பதவியை விட்டுகொடுக்க விரும்பாத அவர் உடனே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். இதனால் அறிவிப்பு வெளியாகிய 45 மணிநேரத்தில் மமுன் ஷாகான் ஒரு மணப்பெண்ணை கண்டுபிடித்தார். அப்பெண்ணை உடனே அவர் திருமணமும் செய்து கொண்டார். இவரின் இந்த செயல் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.