
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. தற்போது ஒரு வேடிக்கையான திருமண வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பின் மாப்பிள்ளை மீது சற்று பரிதாபநிலை தான் ஏற்படுகிறது.
அதாவது, ஒரு திருமண விழாவின்போது பட்டாசு வெடித்ததால் மணமகன் பீதியடைந்த வீடியோ ஒன்று சமூகஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. திருமண நிகழ்ச்சியின் போது இதுபோன்ற குறும்புத்தனத்தை நண்பர்கள் தான் செய்வார்கள். இங்கும் மணமகனின் நண்பர்கள் தான் இப்படி செய்துள்ளனர்.
View this post on Instagram