அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் போட்டிட்டார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கமலா ஹாரிஸ் தனது கணவருடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் கலிபோர்னியாவில் உள்ள வெஸ்ட்உட் பகுதியில் உள்ள ராஞ்ச் மார்க்கெட் ஆசியன் என்ற மளிகை கடைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.

அப்போது அவர்கள் கடையை விட்டு வெளியே வரும்போது கமலா ஹாரிஸ் கையில் பிளாஸ்டிக் பை இருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தினார், அதோடு அதனை தடை செய்ய வேண்டும் என்றும் பேசினார். ஆனால் இந்த வீடியோவில் அவர் தனது கையில் பிளாஸ்டிக் பையுடன் வருவதைக் கண்ட பயனாளர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.