
கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் கூலி தொழிலாளி ஆன இவர் வேலைக்கு சென்ற இடத்தில் வளர்ந்திருந்த ஒரு செடியை அழகு செடியென நினைத்து வீட்டிற்கு கொண்டு வந்து வளர்த்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது கஞ்சா செடி போல உள்ளது என்று கூறி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த செடியை சோதனை செய்ததில் அது கஞ்சா செடிதான் என்று உறுதியானது. உடனே அந்தச் செடியை வேருடன் பிடுங்கி அகற்றியதோடு ராதாகிருஷ்ணனையும் கைது செய்து விசாரணைக்கு பின் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.