
ஜம்மு காஷ்மீரில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது, அதனை இனிமேல் நடக்க விடமாட்டோம். இந்த சட்டம் இளைஞர்களின் கையில் ஆயுதம் மற்றும் கற்களையும் கொடுத்தது.
ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் குடும்பத்தில் இருக்கும் மூதாட்டிகளுக்கு ரூபாய் 18000 வழங்கப்படும். அதோடு உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2 சிலிண்டர்கள் வழங்கப்படும். மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3000 வழங்கப்படும். சட்டசபை தேர்தலின் முடிவு எப்படி இருந்தாலும், குஜ்ஜார்களுக்கான இடஒதுக்கீட்டில் கையை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.