
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , நாங்கள் தொடர்ந்து SC மக்களின் பிரச்சினைகள்… எல்லாத்திலும் இருக்கோம்… குஷ்பு இப்பதான் விழித்திருக்கிறார்கள்…. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னேன்… மணிப்பூர் பிரச்சனையில் குஷ்பூ கோமாவில் இருந்தார்கள். அன்பு சகோதரி அனிதாவின் மரணத்தில் அப்பொழுது குஷ்பூ கோமாவில் இருந்தார்கள். இப்பொழுதுதான் குஷ்பூ விழித்துள்ளார்.
அவர்கள் தூக்கத்தில் உளறுகின்ற மாதிரி காங்கிரசை சொல்கிறார்கள். குஷ்பூவுக்கு 24 மணி நேரம் கால கெடு கொடுக்கிறோம். அவர்களின் பதிவை நீக்க வேண்டும். வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் குஷ்பூ வீட்டை முற்றுகையிட்டு,
தமிழ்நாடு காங்கிரஸ் SC அணி சார்பாக எனது தலைமையில் போராட்டம் நடத்துவோம் . அவர்கள் வீட்டை விட்டு எங்கேயும் நகர முடியாத அளவிற்கு போராட்டம் வன்மையாக நடத்துவோம். ரஜினிகாந்த் பேசினது சரி என்றால், மன்சூர் அலிகான் பேசுவதும் சரி. ரஜினிகாந்த் பேசுவதை தவறு என்றால், மன்சூர் அலிகான் பேசுவதும் தவறு. சினிமாவில் இருக்கிறவர்களை சினிமாக்காரராக தான் பார்க்க வேண்டும். லியோ படம் விழாவில் விஜய் கூட சொல்லியிருப்பார்.
சினிமாவை சினிமா மாதிரி பாருங்கள். எங்கள் ரசிகர்கள் எல்லாருமே என்னை உயிரை கொடுக்கிற அளவிற்கு இருந்தாலும்…. சினிமா படம் சரியாக இல்லை என்றால், என் படத்தை கூட ஓட விட மாட்டார்கள்… அதே போல… விஜய் புகைபிடிக்கிறார், காட்சியில் வருகின்றார் என சொன்னதுக்கு தியேட்டரில் இருக்கும் வரை தான் அது காட்சி என தெரிவித்தார்.