
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்றைய கட்டத்திலே காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம், பிரச்சனைகள் எல்லாம் உலக அளவில் வந்தும்…. அதனுடைய தமிழ்நாட்டில் இருந்தும்… எந்த நடவடிக்கை அரசு எடுக்காதது எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அடிப்படையில் இதெல்லாம் மக்களுடைய பிரச்சனைகள். முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் வந்து ஆய்வு நடத்தி,
மக்களிடம் கருத்து கேட்டு… இது வேணுமா ? இது என்ன செய்யணும் ? ஒரு அடிப்படை அரசியல் இது…. எவ்வளவு போராடிட்டு இருக்கோம்… எவ்வளவோ கேட்டுட்டு இருக்கோம்… இந்த திட்டத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்.
அதன் பிறகு ஜெயலலிதா அம்மையார் அறிவித்தார். அன்றைய கட்டத்தில் 3500 கோடி ரூபாய் அறிவிப்பு வந்தது… கடந்த ஆட்சி காலத்திலேயே எடப்பாடி பழனிசாமி அவர்கள் 500 கோடி ரூபாயில் ஒரு சிறிய அளவிலே இந்த திட்டத்தை தொடங்கினார்கள். இது ஆத்தூர், தலைவாசல் வரை இந்த திட்டம் செல்ல வேண்டும். ஐந்து டிஎம்சி நீரை உபரி நீரை எடுத்து, ஏரிகள் குளங்களை நிரப்ப வேண்டும்.
மணிமுத்தாறு, வசிஷ்ட நதியில் இணைத்தால் இந்த ஒட்டுமொத்த சேலம் மாவட்டமும் செழுமை பெறும் அது மட்டுமில்லாமல் பனைமரத்துப்பட்டி ஏரியில் தூர்வாரி தண்ணீர் நிரப்ப வேண்டும் சேலம் ஸ்டீல் பிளான்ட் பிரச்சினை பற்றி கடந்து முறையும் நான் சொல்லியிருக்கிறேன். ஒரு அறிவிப்பு தான் வந்திருக்கிறது. இன்னும் அந்த கத்தி அப்படியே தான் இருக்கிறது மேல. ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது, அவ்வளவுதான்…. அந்த அறிவிப்பை நான் பெரிதாக கருதவில்லை. இந்த நிலத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்…
நிலம் கொடுத்தவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஏன் சும்மா வச்சிருக்கீங்க ? மொத்தம் 4000 ஏக்கர்… அதில் கிட்டத்தட்ட 700 ஏக்கர் எடுத்துருக்காங்க… மருத்துவக் கல்லூரி அதற்கெல்லாம் எடுத்து இருக்காங்க… மீதம் 3000 ஏக்கர் அப்படியேதான் இருக்கு அதை திருப்பிக் கொடுக்க வேண்டும்… சேலம் நகரத்தில் குப்பையை எரிக்கின்ற பிரச்சனைகள் இன்னும் அதற்கு தீர்வு வரல… அது சம்பந்தமாக பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் போன முறை சொல்லி இருந்தோம் என பேசினார்.