
தமிழ் சினிமாவில் சிறந்த பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பட்டையை கிளப்புபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரின் பாடல்களுக்கு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை, போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் மீசைய முறுக்கு, நட்பே துணை, சிவகுமாரின் சபதம், நான் சிரித்தால், அன்பறிவு போன்ற படங்களில் நடித்தும் உள்ளார்.
இவர் இசையமைத்த டக்கர் என்ற பாடல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் லண்டன், மலேசியா போன்ற வெளிநாடுகளில் ரிட்டன் ஆப் த டிராகன் என்ற பெயரில் இசைக்கச்சேரி பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.
ஹிப்ஹாப் ஆதியின் பூர்விக ஊரான கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நேற்று தன் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். தி நிகழ்ச்சியின் போது திடீரென இளைஞர்களிடையே கலவரம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்டையிட்ட இளைஞர்களை அழைத்துச் சென்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் கலவர தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.