ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி உங்களது KYC விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை எனில் மற்றும் நீங்கள் வங்கிக்கு முன் வழங்கிய கேஒய்சி குறித்த அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் அவற்றை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. அத்தகைய நிலையில் வாடிக்கையாளர்களின் சுய அறிவிப்பு போதுமானது ஆகும். இதற்காக வங்கிக் கிளைக்கு போகவேண்டிய அவசியம் கிடையாது.

உங்களது பதிவுசெய்யப்பட்ட மின் அஞ்சல், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம் (அ) இணையம்/ஆன்லைன் வங்கி வாயிலாக கேஒய்சி விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை என நீங்கள் அறிவிக்கலாம். அதுபோன்ற வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு வேளை உங்களது முகவரி மாறி இருந்தால், புதிய முகவரி தகவல் மற்றும் அதன் ஆவணச்சான்று (Address Proof) மீண்டுமாக சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களது கேஒய்சில் உள்ள முகவரியை தவிர மற்ற அனைத்து விபரங்களும் முன்பு போன்றே இருந்தால், வங்கிக் கிளைக்கு செல்லாமல் ஆன்லைன் வாயிலாக புதிய முகவரி சான்றையும் சமர்ப்பிக்கலாம். வாடிக்கையாளர் புது முகவரி சான்றைச் சமர்ப்பித்த 2 மாதங்களுக்குள் வங்கிகள் புதிய முகவரிச் சான்றினைச் சரிபார்க்கலாம்.