
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோனான்விளை பகுதியில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் தங்கிய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கேத்ரீனா(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டிற்கு செல்லும் பாதை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் பிரச்சனைக்குரிய பாதையை சிலர் சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த கேத்ரீனா ஆற்றூர் காவின்குளம் சாலையின் நடுவே கட்டில் போட்டு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கேத்ரீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்த்தரப்பை சேர்ந்தவரிடமும் விளக்கம் கேட்டுள்ளனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து போக செய்தனர். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.