
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) தலைவராக இருப்பவர் மாரி கவுடா. கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து மாரி கவுடாவும், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவும் மிக நெருக்கமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் மைசூர் நகர்புற அமைப்பிற்காக கொடுக்கப்பட்ட இடம் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயருக்கு 14 மனைகளாக ஒதுக்கப்பட்டுள்ளது என வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க அந்த மாநில ஆளுநர் தாவர் சந்து கலாட் அனுமதித்தார். இதைத்தொடர்ந்து சித்தராமையா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்துபெங்களூரு நீதிமன்றம் நில அபகரிப்பு குறித்து சித்தராமையா மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை செய்யப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூறியது. இந்த நில மோசடியால் மைசூர் அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பு என குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் சித்தராமையா இந்த மனைகள் அனைத்தும் என் மனைவியின் சகோதரர் என் மனைவிக்கு கொடுத்தது எனக் கூறியுள்ளார். இதற்கிடையே சித்தராமையாவின் மனைவி மூடாக்கு எழுதிய கடிதத்தில் 14 மனைகளையும் திருப்பி வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். இந்த மனைகளை மைசூர் அரசு திரும்பி வாங்குவதாக கூறியது.இந்த விவகாரத்திற்கு இடையில் மூடா தலைவர் மாரி கவுடா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது வயது முப்பின் காரணமாக ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார். தனது நண்பர் மாரி கவுடாவின் ராஜினாமா குறித்து சித்தராமையா எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.