பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா. இவருக்கு 86 வயது ஆகும் நிலையில் நேற்று பெங்களூருவில் மாரடைப்பால் திடீரென காலமானார். இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். முதலில் நடன கலைஞர் ஆக அறிமுகமான சகுந்தலா பின்னர் நடிகையாக உயர்ந்தார்.

இவர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய சகுந்தலா 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு சின்னத்திரையிலும் நடித்துள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.