
நடிகர் விஜய் என்று லியோ திரைப்படத்தில் வெற்றி வெளியிட்டு விழா மேடையில் தனது உரையை தொடங்குவதற்கு முன்பாகவே நான் ரெடி என்ற பாடலுடன் தான் அவர் இந்த உரையை தொடங்கினார். அதில் குறிப்பாக அவர் தெரிவித்தது என்னவென்றால் ? இவ்வளவு நாளாக நான் என் நெஞ்சில் உங்களை குடி வைத்துக்கிறேன் என்று ரசிகர்களை பார்த்துக் கேட்டிருந்தார். இல்லை ரசிகர்களான நீங்கள் தான் என்னை நெஞ்சில் குடி வைத்து இருக்கின்றீர்கள் என்று ரசிகர்களை பார்த்து தெரிவித்து இருந்தார். ரசிகர்களுக்கு என்னுடைய உடம்பு தோலை உங்களுக்கு கால் செருப்பாக செய்து போட வேண்டும் என்று நடிகர் விஜய் பேசினார்.
நண்பா கோபம் நமக்கு தேவையில்லை. நமக்கு நிறைய வேலை இருக்கு. அந்த வேலைகளை நாம் பார்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டம் இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த்-க்கு ஒரு பட்டம் இருக்கிறது. நடிகர் அஜித்குமார்-க்கு ஒரு பட்டம் இருக்கிறது. அதேபோல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு ஒரு பட்டம். அதே போன்று ரஜினிகாந்துக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் இருக்கிறது. அது அவருக்கு தான் சொந்தம். தளபதி என்று சொன்னவுடன் அது ரசிகர்கள் நீங்கள் தான் சொன்னார்.
நடிகர் விஜய் மேடையில் பேசும்போது பல நெகிழ்ச்சியான சம்பவம் பேசினார். அதில் தொகுப்பாளர்கள் விஜய் இடம் கேள்வி எழுப்பினர். 2026 சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்வியும் அவரிடம் வைக்கப்பட்டது. அதற்கு நடிகர் விஜய் ஆரம்பத்தில் கொஞ்சம் மலுப்பலாக இருந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரையில் கப்பு முக்கியம் பிகிலு என்று ரசிகர்களை பார்த்து தெரிவித்தார்.
நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலில் குறி வைத்து தான் பேசுகிறார் என்று ரசிகர் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக ஆகி உள்ளது. நடிகர் விஜய் அவர்கள் 2026 தேர்தலில் நேரடியாக சந்திக்க உள்ளார் என்று இதன் மூலமாக வெளிச்சமாகவே தெரிந்திருக்கிறதுநடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா ? என்பது குறித்தாக தொகுப்பாளர் கேட்ட கேள்வி இருந்தது. அதற்க்கு 2026க்கு கப்பு முக்கியம் பிகில். அதை நீங்கதான் பார்த்துக்கணும் என்று ரசிகர்களை பார்த்து நடிகர் விஜய் சொன்னது மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.