
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அகங்காரத்தால்.. ஆணவத்தால்… அவர்கள் தவறுக்கு மேல், தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். தவறான ஆட்சி கொடுத்ததால்… முறைகேடுகளால்… ஊழல்களால்… மக்கள் வரிப்பணத்தை சுரண்டியதால்…. இன்றைக்கு மக்கள் வெகுண்டிருந்து தீய சக்தி திமுகவிற்கு ஆட்சி பொறுப்பை கொடுத்து விட்டார்கள்.
மக்கள் பழனிச்சாமி ஆட்சியில் இருந்த கோபத்தால் திமுகவிற்கு ஆட்சி பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். திமுக என்றைக்கும் திருந்தாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து வருகிறார்கள். நீட் தேர்வு விலக்கு தொடங்கி, திமுக சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு மக்கள் விரோத ஆட்சியாக இந்த தீய திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த தீய சக்திகளையும், ஏற்கனவே ஆட்சி செய்த பழனிச்சாமி தலைமையிலான துரோக சக்திகளையும் வீழ்த்த வேண்டிய கடமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. அதை கொங்கு மண்டலத்திலேயே நீங்கள் நிறைவேற்றி காட்ட வேண்டும். அவர்களின் பண பலம் இனி எடுபடாது.
வருங்காலம் உங்களுக்கு நன்றாக தெரியும். சட்டமன்ற பொது தேர்தலோடு அவர்களுடைய ஆட்டம் அடங்கிவிட்டது. இனி வருங்காலத்தில் அவர்கள் பணத்தை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது. இரட்டை இலை இன்றைக்கு பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலையை காட்டி மக்களை ஏமாற்ற முடியாது என்பது வருங்காலம் பாராளுமன்ற தேர்தல் உணர்த்தும்.
எனவே தான் சொல்கிறேன் கூட்டணியை பற்றியோ, தேர்தலைப் பற்றியோ கவலைப்படாமல் உங்கள் பணிகளை நீங்கள் செய்யுங்கள். பாராளுமன்ற தேர்தல் நமக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். வருகின்ற 2026லே நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தல் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமைத்திட இந்த பாராளுமன்றத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் உழைத்திட வேண்டும் என தெரிவித்தார்.