
தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. ‘லியோ’ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு அங்கமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படத்தில் முதல் பாடலான ‘நா ரெடி தான் வரவா’ கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. இருப்பினும், அவர்கள் நேரத்தை குறிப்பிடவில்லை.. இதனால் விஜய்யின் தீவிர ரசிகர்கள் டிரெய்லருக்காக சமூக ஊடக தளங்களில் காத்துக்கிடந்தனர். நேற்று (அக்டோபர் 4) முதல் ‘லியோ டிரெய்லர் டே’ என்ற ஹேஷ்டேக் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘லியோ டிரெய்லர் டே’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையில், அக்டோபர் 4 ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழுடன் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரெய்லர் 6:30 மணிக்கு வெளியாகும் என்று செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தது. அதில், எங்களுக்கு கேட்டுருச்சு நல்லா கேக்குது.. சமையல் முடிஞ்சுது.. கொஞ்ச நேரத்துல செர்வ் பண்ணிட்ரோம் என குறிப்பிட்டது. இந்நிலையில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட திரையரங்குகளில் டிரைலரை கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
Serving you this virundhu from our hearts to yours ❤️
Here’s #LeoTrailer ▶️
Tamil: https://t.co/80TQzvqaLN
Telugu: https://t.co/Sk8Ezgr4np
Kannada: https://t.co/KvY4TpbUPw#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial… pic.twitter.com/xFW66BC3s8
— Seven Screen Studio (@7screenstudio) October 5, 2023
Unleashing my @actorvijay na in a never seen before avatar 🔥💯#LeoTrailer
Tamil: https://t.co/yVnAVolBUh
Telugu: https://t.co/ppRRPK6TLX
Kannada: https://t.co/zvrRp1yvB7#LeoFromOctober19#LEO 🔥🧊
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 5, 2023