தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டியில் இந்த ஆண்டு பேருந்து நிலையம் அமைக்க அரசு முடிவு எடுக்குமா? என்று தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த தேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு கூறியதாவது அங்கு பேருந்து நிலையம் அமைப்பதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. பேருந்து போகும் பாதை சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஏற்கனவே அங்கு பைபாஸ் ரோடு போடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அங்கு பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.