
காப்பீடு நிறுவனமான LIC, அண்மையில் தன் பாலிசிதாரர்களுக்காக முதல் வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியது. LIC இணையத்தளத்தில் தங்களது பாலிசிகளை பதிவுசெய்த பாலிசிதாரர்கள் மட்டுமே இச்சேவைகளை வாட்ஸ்அப்-ல் பெற முடியும். தற்போது LIC வழங்கும் வாட்ஸ்அப் சேவைகள் குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்.
# செலுத்தவேண்டிய பாலிசி பிரீமியம்
# ஊக்கத்தொகை
# பாலிசியின் நிலை
# கடன் தகுதி மேற்கோள்
# கடன் திருப்பிச் செலுத்துவதற்கான மேற்கோள்
# கடன் வட்டி செலுத்தும் தொகை
# பிரீமியம் செலுத்திய சான்றிதழ்
# ULIP-அலகுகளின் அறிக்கை
# LIC சேவை இணைப்புகள்
# சேவைகளைத் தேர்வு செய்யவும்/விலகவும்
# உரையாடலை முடிக்கவும்
LIC வாட்ஸ்அப் சேவைகளை பயன்படுத்துவது எப்படி?
# உங்களது தொலைபேசியின் தொடர்புகளில் LICன் அதிகாரப்பூர்வமான வாட்ஸ்அப் எண்ணை சேமிக்கவும். எண்: 8976862090.
# பின் உங்கள் வாட்ஸ்அப்-ஐ திறந்து, எல்ஐசி ஆஃப் இந்தியா வாட்ஸ்அப் சாட் பாக்ஸைத் தேடித் திறக்க வேண்டும்.
# மெசேஜ் பாக்ஸில் “ஹாய்” என அனுப்ப வேண்டும்.
# பின் LIC தானியங்கி உங்களுக்கு மேற்கூறிய 11 ஆப்ஷனை கொடுக்கும்.
# சேவை தேர்வு விருப்ப எண்ணுடன் மெசேஜில் பதில் அளிக்கவும். உதாரணமாக 1 பிரீமியம் தேதிக்கானது மற்றும் 2 போனஸ் தகவலுக்கானது.
# அதனை தொடர்ந்து வாட்ஸ்அப் மெசேஜில் தேவையான விபரங்களை LIC பகிரும்.