
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கடந்த ஜனவரி 11ம் தேதி தமிழ்நாடு முழுக்க இந்து மக்கள் கட்சியின் சார்பிலே சேவ் தமிழ்நாடு டிஸ்மிஸ் டிஎம்கே, புயல் – மழை – வெள்ளம் அபாயத்திலிருந்து மக்களை காக்க தவறிய இந்த திராவிட மாடல் திமுக அரசாங்கம் டிஸ்மிஸ் செய்ய பட வேண்டும். இந்த தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும்.
இந்த தமிழகத்திலே பொதுமக்களுடைய பணம் விரயம் செய்யப்படுகிறது. சிறைச்சாலைக்குள்ள இருக்கக்கூடிய குற்றவாளிகள் அமைச்சராக நீடிக்கின்றார். விசாரணை குற்றவாளியாகவே இருக்கட்டும்…. சிறைச்சாலை உள்ளேயே அமைச்சராக இருக்கலாம். இவர்கள் அமைச்சரவையில் 12 பேர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டிலே சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. நீங்கள் இப்ப பாருங்கள்….
எந்த சாலையும் ஒழுக்கமாக இல்லை. சாலைகள் அனைத்துமே குண்டும் குழியுமாக… விபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கிறது. குப்பைகள்… தூய்மை பணியாளர்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. ஒப்பந்த பணியாளர்கள் மூலமாக தூய்மை பணியாளர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதே மாதிரி போக்குவரத்து தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மின்சார துறை, போக்குவரத்து துறை இரண்டுமே நஷ்டத்தில் இயங்குகிறது. ஆனால் இவர்கள் நடத்தக்கூடிய தொழிலில் லாபத்தில் இயங்குகிறது என தெரிவித்தார்.