லண்டனை சேர்ந்த ஈதன் மூனி என்பவர் ஒரு நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு ஆலோசகராக இருக்கிறார். இந்நிலையில் ஒரு வாலிபர் அவரது வேலை வாய்ப்பை நிராகரித்துவிட்டு, வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் கோபத்தில் தனது கீபோர்டை உடைத்ததாக லிங்க்டின்-ல் பகிர்ந்துள்ளார். அந்த வாலிபர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் அவர் வரவில்லை.

அரை மணி நேரத்திற்கு பிறகு, அந்த வாலிபர் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளார். அதில் தான் மற்றொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்ட மூனி மிகுந்த கோபத்தில் தனது கீபோர்டை இரண்டாக உடைத்து, அந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது கோபத்திற்கு பலரும் தங்களது  விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.