நாமக்கல்லில் இருந்து லாரி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அய்யன் வாய்க்கால் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு வாய்க்காலில் பாய்ந்தது. இதனால் லாரியின் முன்பகுதி தண்ணீரில் மூழ்கியது. உடனடியாக டிரைவரும், கிளீனரும் நீந்தி லாரியை விட்டு வெளியேறியதால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

பின்னர் இருவரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.