புதுச்சேரி முருகம்பாக்கத்தில் வசித்து வரும் அழகம்மை என்பவரின் மொபைல் எண்ணிற்கு மும்பை போலீஸ் அதிகாரி எனக் கூறி மர்ம நபர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் அழகம்மையின் ஆதார் எண், கைப்பேசி எண்களை பயன்படுத்தி தைவான், கம்போடியாவிற்கு போதை பொருள் கடத்தல் நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க பணம் கொடுக்க வேண்டும் என கூறியதோடு ரூபாய் 27 லட்சத்தை மோசடியும் செய்துள்ளனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். பின்னர் இணையவழி குற்றப்பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் உத்தர விட்டுள்ளார்.

அதன் பெயரில் ஆய்வாளர் விசாரணை நடத்தியதில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து மோசடி கும்பல் செயல்பட்டது தெரிய வந்தது. மேலும் இது பற்றி விசாரணை நடத்தியதில் மோசடியில் ஈடுபட்டவர்கள் அமித், ராகேஷ் கோஷ் மற்றும் செஞ்சிப் தீப் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இணைய வழியில் நாடு முழுவதும் பலரிடம் ரூபாய் 66.11 கோடி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதோடு இந்த வழக்கில் தலைமறைவாகிய 6 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.