
மத்தியப் பிரதேச மாநிலம், சிங்ராலி மாவட்டத்தில், பத்ரி கிராமத்தைச் சேர்ந்த பவன் கோல் மற்றும் ராணி கோல் என்ற இளம் ஜோடி, பார்கவான் காவல் நிலையம் அருகே உள்ள வயல்வெளியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கையில்,
சனிக்கிழமை காலை வேலைக்குச் சென்ற காதலர்கள் இரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை கிராம மக்கள் அவர்களது உடலை கண்டெடுத்தபோது, அவர்களின் கால்களில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் எழுந்து, தற்கொலை குறித்த சந்தேகத்தை எழுப்பியது. இரு வீட்டாரும் காதல் விவகாரம் பற்றி அறிந்திருந்து, பிரச்சனையாக வீட்டில் மாறியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் இளம் ஜோடியின் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றனர்.