திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள பகுதியில் பள்ளி மாணவி தர்சனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த ஆகாஸ்(19) என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறினர். தன்னுடைய காதலுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக அந்த சிறுமி, தனது தாய் மாமாவான மாரிமுத்து(20) என்பவரையும் ஆகாஸுடன் பழக வைத்துள்ளார். இதையடுத்து தர்ஷனாவிற்கு கடந்த 18ம் தேதி பிறந்த நாள் என்பதால், ஆகாஷ் சென்னையில் இருந்து சப்ரைஸ் கிப்ட் கொடுப்பதற்காக உடுமலைப்பேட்டைக்கு வந்துள்ளார்.

அப்போது ஆகாஸ் மற்றும் மாரிமுத்து மது அருந்துவிட்டு, தர்ஷனாவை தொடர்பு கொண்டு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பதாக அழைத்துள்ளனர். வீட்டைவிட்டு புறப்பட்ட பெண் இரவு வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் தர்சனா காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் அந்த மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் குறிச்சிகோட்டை அடுத்துள்ள பகுதியில் உள்ள குளத்தில் 3 சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் 3 சடலங்களையும் மீட்டனர்.

அதில் ஒன்று காணாமல் போன தர்சனா என்பது தெரிய வந்தது. மற்ற 2 சடலங்கள் சென்னையில் சேர்ந்த ஆகாஸ், குறிச்சி கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தடுமாறி குளத்திற்குள் விழுந்து நீர் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்திலும், வெவ்வேறு கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.